Saturday, August 25, 2012

அவரும் நானும்

பகல், வெயிலின் தகிப்புக்கு ஈடுகொடுத்து நகர்ந்து கொண்டிருந்தது. அந்த வீட்டு வாசலிலிருக்கும், பெரிய மரத்தடியிலிருந்த கயிற்று கட்டில் அந்த வீட்டின் சொந்தகாரரும், பெரியவருமான சதாசிவத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. நானுந்தான், பொழுது விடிந்து இவ்வளவு நேரமாகியும் அவரை பார்க்காமலிருப்பது கண் இருந்தும் குருடனாய் இருப்பது மாதிரி தவித்துக் கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டிலிருந்து வெளிப்பட்ட சுசீலா அவர் வீட்டின் கதவை தட்டி மாமா, மாமா என்று குரல் உசத்தி அழைத்துவிட்டு பதில் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றாள்.

சதாசிவம் அந்த ஊருக்கு வேலை மாறுதல் காரணமாக வந்தவர், அந்த வேலை அவ்வூரிலேயே நிரந்தரமாக கிடைத்தவுடன், இந்தவீட்டை கட்டிக்கொண்டு தன் மனைவியுடன் குடியேறினார். இயற்கையின்பால் அவர் கொண்ட பற்றின் காரணமாக, அவர் வீட்டின் முன்னும் பின்னும் செடிகொடிகளும் மரங்களும் செழித்து வளர்ந்தன. அன்பான நல்ல மனைவி, வீடு, நிறைந்த வேலை, என்று வாழ்க்கை வசதிகளை அவருக்கு தந்த இறைவன், கொடுக்க மறந்தது

Monday, July 2, 2012

அன்பு மலரும் போது

சுமியின் கண்கள் கூடத்து அறையில் இருந்த பெரிய கடிகாரத்தில் தவிழ்ந்தன. ஆயிற்று, இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளது உற்ற தோழி நளினியின் கழுத்தில் மாங்கல்யம் என்ற மலர் மலர்ந்து விடும். அந்த மலர் வாடிவிடாமல் என்றும் மனம் வீசிக்கொண்டே இருக்கவேண்டுமென இறைவனிடம் பிரார்த்தித்துகொண்டாள் சுமி. ஒரு மணி நேரத்தில் "ஒருவருக்கு" சொந்தமாகிவிடும் நளினி நாளை இந்த நேரத்தில் "அந்த ஒருவரின்" வீட்டில் இருப்பாள். அதன்பின்பு சுமிக்கு இந்த வீட்டில், ஏன், இந்த உலகத்திலேயே "அன்பு" என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. தெரியாமல் போய்விடும்.

இதோ! நளினி வருகிறாள். கழுத்து நிறைய நகைகளும் பட்டு சேலையும் மின்ன அவள் வருவது

Monday, June 25, 2012

கன்னி, ஆனால் தாய்.

"ன்னை ஏன் காப்பாற்றினீர்கள்?" அவள் விம்மினாள்.
"என் நிலையில் யார் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள். தவிர, இன்னும் சில மாதங்களில் இந்த உலகைக்காண ஆவலோடு இருக்கும் ஒரு ஜீவனைக்கொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கிறது", அமைதியாக கேட்டாள் நிர்மலா.
"அவமான சின்னத்தை சுமந்து கொண்டிருக்கும் என்னால் உங்களுக்கு ஏன் அவப் பெயர் வரவேண்டும், அதனால்தான் கேட்கிறேன், இந்த அநாதையை என்னை ஏன் காப்பாற்றினீர்கள் என்று?", அவள் கலங்கிய குரலில் கேட்டாள்.

"உன் பெயர் என்ன?"

Sunday, April 8, 2012

பெண்

மண்ணில் பதிந்த பாதங்களை பற்றியிழுத்து விட்டு
மறுபடி ஓடிவந்து பாதங்களை தழுவி  தவறுக்கு வருந்தி
மன்னிப்பு கேட்கும் குழந்தை மனதுடன் நித்தம் நித்தம்
மருகி கொண்டு வந்து போகும் கடல் அலைகள்...
ஆனால், நீ அந்த கடல் மட்டுமல்ல......
விண்மீன்களின் நடுவே தனக்கென்று ஓர் இடத்தை,
விரும்பி அமைத்துக்கொண்டு கவிஞனுக்கு துணை செய்ய,
பாதியாக, பாதி நாட்கள் வந்து போனாலும் ஒளியில்,
பரிதிக்கு நிகராக பாரினில் உலா வரும்

Wednesday, March 28, 2012

இயற்கை

கடல் இறைச்சலின் இதத்தோடு  இனிய
கானத்தின் இசையோடு
கண்மூடி அமர்ந்தபோது அழகான
கவிதை வரவில்லை.
மூடிய கண்களில்
நித்தமும் வரும் கவிதைகளின்றி  
மூர்க்கமான நித்திரை வந்தது..
இயற்கை வென்றது..
இயலாமை நகைத்தது..

Sunday, January 22, 2012

மனசுஅந்த வீட்டின் முற்றத்தில் முருங்கை மரத்தில் அமர்ந்திருந்த அந்த காகம் கரைந்தது. உள்ளேயிருந்து முற்றத்திற்கு வந்த முதியவர் ஓருவர் கரைந்து கொண்டிருந்த அந்த காகத்தை அண்ணாந்து பார்த்தார்.  "ஏன் இப்படி காலையிருந்து கத்தி கொண்டேயிருக்கிறாய்?" யாராவது வரப்போகிறார்களா என்ன? என்று கேட்டபடி கீழேயிருந்து கல் எடுத்து எறியும் பாவனையில் ஓரு முறை கீழே குனிந்து நிமிர்ந்து கையை ஆட்டியபடி "சூ" "சூ" என்றபடி அதை விரட்டினார். அந்த காக்கையும் அவருக்கு பயந்தது போல் அமர்ந்திருந்த அந்த

Monday, January 2, 2012

"தானே".......... "தானே" ...........காலைக் கதிரவனை துணைக்கழைக்காமல்,
காலை நனைத்து விட்டு ஓடும்,
கடல் அலைகளை கட்டவிழ்த்து,
சாலை வரை ஓட விட்டு,
சாலையோர மரங்களுக்கு,
சடுதியில் சாவை தந்தபடி,
சாலையை சகதியாக்கி,
சாலையோரத்தை கசடாக்கி,
விரையும் வாகனங்களை முடக்கி,
விரையத்தை உண்டாக்கி,
இன்னும் பல அழிவுகளை,
இயன்ற வரை  பரிசளித்து விட்டு,,
"தானே" வந்து  "தானே" சென்ற புயலே, "நீ"
நீடித்து ஓரிடத்தில் நிலைகொண்டிருந்த போது, உன்,