Sunday, December 29, 2013

முருகனுக்கோர் ஓர் முகில்...ஆறுமுகமும், முகம் மாறா அழகும்,
ஆசையுடன் அணிவித்த அணிகலன்களும்,
மாசுமருவற்ற பரந்த நெற்றியும்,
மகிழ்விக்கும் நெற்றியில் சுருண்டோடி
நெளிந்தோடும், தலைகேசமும்,
தலைகேசத்தின் தவிப்புணர்ந்து
தாங்கி நிற்கும் மணிகீரீடமும்,
மணிகீரீடத்தின் மதிப்பை குலைக்காமல்,
குடையாய் கவியும் கோபுரமும்,
கோபுரத்தின் நடுவில் நாட்டிய வேலினால்,
நான் வேலவன் என்று சொல்லும்
வேலவா! உன்

Sunday, May 12, 2013

விதியின் சாகசம்

பாதையை காட்டி பயணிகளை
பயணிக்க பணித்தான் ;
படைத்தல் ஒன்றையே ” விதியிடம் ”
பரிசாக பெற்ற ” படைத்தவன் ”
அண்டத்தையும், அகிலத்தையும்,
அழகாக, அற்புதமாக்கினான்.
கோடி ஜீவ ராசிகளுக்கும் உயிர்,
தேடி கொடுத்து உலாவச் செய்தான்.
பிழைப்பதற்கும் வழி காட்டினான்,  மனம்

Sunday, April 28, 2013

போலி

கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்த நளினி ஆளுயர நிலை கண்ணாடி முன் நின்று தன் அழகை தானே ரசித்து கொண்டிருந்தாள். லைட் நீல நிறத்தைக் கொண்ட புடவையும், அதே நிறத்தில் பிளவுசும் அவளை அழகு தேவதையாக்கி கொண்டிருந்தன. இந்த நேரத்தில் மோகன் தன் அருகில் இருந்தால் தன்னை எப்படியெல்லாம் வர்ணிப்பான். அந்த நினைப்பு அவள் உள்ளத்தில் எழுந்ததுமே, அவளது அழகிய அதரங்களில் ஒரு புன்னகை நெழிந்தோடியது.
"நளினி" என்ற குரலைக் கேட்டதும் இனிய கனவுகளில் உலாவி கொண்டிருந்தவள் "பொத்"தென்று கீழே விழுந்து விட்டதை போன்று உணர்ந்தாள்.
சட்டென்று திரும்பி பார்த்தவள் அங்கு தன் அம்மா அன்னபூரணி கையில் பால் டம்பளருடன் நிற்பதை கண்டதும் " என்ன அம்மா ?"

Sunday, February 10, 2013

இழந்த கண்கள்

''என்ன இது விநோதா?'' தங்கை தன் முன் வைத்த பணத்தைப்பார்த்து திகைப்புடன் கேட்டான் ரகுநாதன்...

  ''நம் தங்கை மாலினியின் திருமண  செலவிற்கு என்னால் இயன்ற உதவி அண்ணா..'' விநோதா நிதானமாக ௬றினாள்.
   ''நீ செய்றது கொஞ்சம்௬ட நன்னாயில்லை விநோதா'' நான் ஒருத்தன் மரமாட்டம் இருக்கிற போது நீ உதவி செய்யத்தான் வேண்டுமா?'' கோபத்துடன் கேட்டான் அவன்.
    '' இருந்தாலும் அந்தமரத்தோட நிழலிலேயே வாழ்நாள் முழுவதையும் கழிச்சிடலாம்'ன்னு, நாங்க நினைக்கிறது முட்டாள்தனம் அண்ணா ''
             '' அது அந்த மரத்தோட கடமை, விநோதா... ''

Monday, January 7, 2013

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை

             சுருள்சுருளாக மேகக்கற்றைகள் வானில் வந்து குவிந்து கொண்டிருந்தன. மழை வரும் போலிருந்தது. அவன் தன் வீட்டு வாசல்படியில் அமர்ந்தவாறு எங்கோ வெறித்து நோக்கி கொண்டிருந்தான்.  அவனை பார்த்தாலே அலட்சியமாய் தோள்களை குலுக்கிகொண்டு முகத்தை சுளித்துக்கொள்ளும் அண்ணன் சதீஷ்..... மூத்த அண்ணன் தனக்கு தேவையானதை கேட்டதும் வாங்கித்தருகிறான் என்ற திமிரில், கர்வத்தில், நீ எனக்கு இதுவரை எதுவுமே வாங்கி தந்ததில்லையே; பணமாக தர வேண்டாம், அட்லீஸ்ட் அதை வைத்துக்கொள்ள ஒரு பர்ஸ் ௬ட வாங்கித் தரமாட்டேங்கிறியே பிரகாஷ் அண்ணா... என்று அவன் வேலையில்லாமல் வீட்டிலிருப்பதை நா௲க்காய் கேலியாக குத்திக் காட்டும் கல்லூரியில் படிக்கும் தங்கை சுதா... வீட்டுக்கு வருவோர் போவோரிடமெல்லாம் இவனை பி.ஏ.வரை படிக்க வச்சேன். தண்டம்... ஒரு வேலைக்கும் போகாமல் வீட்டிலே தண்டசோறு சாப்பிட்டுகிட்டு வேலைவெட்டியில்லாமே, உட்கார்ந்து கொண்டிருக்கிறான், என்று அவன் காதுபடவே கண்டபடி கேவலமாக பேசும் அப்பா நாகராஜன். இவர்களை நினைத்தாலே, உலகத்தின் மீதே ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது அவனுக்கு.