Friday, March 6, 2015

காட்டு மரங்கள்...!

உனக்கென்ன.? ராஜ உபசாரம்.! நாங்கள் ஒரு வீட்டின்கதவாய், உபயோகமான பொருள்களாய், உபகாரமாய் இருக்கிறோம்..! ஆனால் உன்னை திருடினால் சிறைதண்டனை, அது, இது என பல விதத்திலும், உனக்கு  பாதுகாப்பு. எங்களை போல் மனிதர்களுக்காக அழிந்து  போகிறவனா  நீ?”

முகஞ்சுழித்தபடி பொறாமையுடன் சந்தன மரங்களைப் பார்த்து
மற்ற மரங்கள் சீற, மனம் விட்டுச் சொன்னது சந்தன மரங்கள்.

மனிதர்களுக்காக நீங்கள் அழிந்து போகிறீர்கள்!! 
நாங்கள் மனிதனுடனேயே அழிந்து போகிறோம்..! அவ்வளவுதான் வித்தியாசம்!! மற்றபடி பாதுகாப்பு என்பது எங்களது பலனை பெறத்தான்...! வேறு எந்த மரியாதையும் இல்லை!என்பதை மனத்தளவில் புரிந்து கொள்ளுங்கள் நொந்த குரலில் சொன்ன சந்தனமரங்களிடம், அவற்றை மனம் நோக வைத்ததற்கு, மனதாற மன்னிப்பு கேட்டன மற்ற மரங்கள்...!


மரத்தின் தற்பெருமை….

கல்லடி பட்டும் வலியின்றி முறுவலிக்கிறேன்.
காய்ந்த போதும் வலியின்றி முறுவலிக்கிறேன்.
பிறருக்கு பயன்படுதல் எவ்வாறு என்பதை 
படித்து பணிவோடு வாழ்ந்து வாவென
படைத்தவன் பகர்ந்து பதித்து அனுப்பியதை,
பதிந்த மனதினிலே, தீயவையின் வேரகன்றதால்,   
அகங்கார சிந்தனையின் தொல்லையின்றி,
அமைதியின் சிகரத்தை தொட்டபடி வாழ்கிறேன்.  

10 comments:

  1. மரமும் பேசுகிறதே அறம் அருமை.
    மரத்துக்கான கவியும் அருமை சகோ..
    மீண்டும் வலைப்பூவுக்கு விடுமுறையா ? காணமுடியவில்லையே..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் உடன் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே..

      \\ விடுமுறையா.? காண முடியவில்லையே..//
      உண்மைதான்! தொடர்ந்து வர முடியவில்லை... உண்மையான சகோதர பாசத்துடன் விசாரித்தமைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. மரத்தின் சிறப்பிற்கு மனிதனை ஈடு செய்யவே முடியாது...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே...

      உண்மை... மனிதனை விட மரத்தின் சிறப்புக்கள் என்றுமே மேன்மையானதுதான்....

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. நேரம் கிடைப்பின் : நீங்க மரமாக போறீங்க...! (http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_16.html)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      நீங்களும் மரத்தின் சிறப்பினை குறித்து பதிவொன்று எழுதியுள்ளீர்களா.? அவசியம் படித்துப் பார்க்கிறேன்..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. சந்தன மரத்தின் குரலாய் உங்கள் பதிவு. மிகவும் நன்று.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே..!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும்,,பதிவின் குரலை நன்று! என பாராட்டியமைக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. மரத்துக்கான கதையும், கவிதையும் மிக அருமை .

    என்னுடைய பதிவு காலிபிளவர் மிளகு பொரியல் !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.!

      தங்களது வருகைக்கும். கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். சகோதரி...

      காலி் ஃ பிளவர் பொரியலைக் காண உங்கள் தளத்திற்கும் வருகிறேன்..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete